லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 8-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக்ஷின்னரை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற
செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெறுவது இது 9-வது முறையாகும். ஒட்டுமொத்தமாக அவர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கால் பதித்துள்ள 35-வது இறுதிப் போட்டி இதுவாகும். இதன் மூலம் அதிக முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த அமெரிக்காவின் கிறிஸ் எட்வர்டின் சாதனையை முறியடித்துள்ளார் ஜோகோவிச். கிறிஸ் எட்வர்ட் 34 முறை இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தார்.
7 முறை விம்பிள்டனில் வாகை சூடியுள்ள ஜோகோவிச் இம்முறை இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் அல்லது ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதுவார். இறுதிப் போட்டியில் ஜோகோவிச் பட்டம் வெல்லும் பட்சத்தில் 8 முறை கோப்பை வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்வார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago