அமெரிக்க பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சிந்து, லக்‌ஷயா சென்

By செய்திப்பிரிவு

கவுன்சில் பிளஃப்ஸ்: அமெரிக்க பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் கவுன்சில் பிளஃப்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், பின்லாந்தின் கல்லே கோல் ஜோனெனை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-8, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான சங்கர் முத்துசாமி 21-11, 21-16 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நிகத் குயனை வீழ்த்தினார்.

அதேவேளையில் சாய் பிரணீத் 21-16, 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் போராடி 7ம் நிலை வீரரான சீனாவின் லி ஷி பெங்கிடம் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-12 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் திஷா குப்தாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி 14-21, 11-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் ஷியங் டியிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா ஜோடி 14-21, 14-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் லின் யு, சு லி வெய் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்