ஆஸ்திரேலியாவின் புதிய எழுச்சி நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ஐசிசி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் 2-ம் நிலைக்கு உயர்ந்துள்ளார். சமீப காலங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கும் ஹெட்டிற்கும் 9 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே விரைவில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறவிருக்கிறார். ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர்கள் பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக் ஐந்து மற்றும் ஒரு இடம் முன்னேறி முறையே 18-வது மற்றும் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
நியூஸிலாந்தின் நம்பர் 1 பேட்டர் கேன் வில்லியம்சன் வலது முழங்கால் காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை கடந்த மார்ச் முதல் ஆடவில்லை. ஆகவே தற்போது இவரை விட 9 புள்ளிகள் குறைவாக இருக்கும் டிராவிஸ் ஹெட் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டி முடியும் போது நம்பர் 1 இடத்திற்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் ஜூலை 19ம் தேதி ஆஷஸ் 4வது டெஸ்ட் தொடங்குகிறது, தொடரில் இதுவரை 2-1 என்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
டிராவிஸ் ஹெட் 3 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இந்தத் தொடரில் 266 ரன்களை எடுத்துள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 116 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், லபுஷேன் போன்ற ஜாம்பவான்களுக்கு ஹெடிங்லீ டெஸ்ட் சரிவர அமையாததால், இந்த மூவருமே ஒரு இடம் பின்னடைவு கண்டனர். ஸ்மித் 4-ம் இடத்திற்கும், லபுஷேன் 5-ம் இடத்திற்கும், ஜோ ரூட் 6-ம் இடத்திற்கும் பின்னடைவு கண்டனர்.
பாகிஸ்தானின் ஸ்டார் பிளேயர் பாபர் அசாம் டெஸ்ட் தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சுத் தரவரிசையில் அஸ்வினின் நம்பர் 1 இடத்திற்கு அடுத்ததாக அதிக இடைவெளி இல்லாமல் பாட் கமின்ஸ் இருக்கிறார். இவர் ஹெடிங்லீயில் அற்புதமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் ஹெடிங்லீயில் 2-வது இன்னிங்சில் அதியற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளையும் மொத்தம் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 11-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
» மறக்குமா நெஞ்சம் | யுவராஜ், கைஃப் கூட்டணி: இதே நாளில் லார்ட்ஸில் இங்கிலாந்தை வென்ற இந்தியா
» WI vs IND | சர்வதேச கிரிக்கெட்டில் 700+ விக்கெட்டுகளை கைப்பற்றிய 3-வது இந்தியர்: அஸ்வின் சாதனை
பேட்டிங் தரவரிசையில் உஸ்மான் கவாஜா 7-ம் இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 8-ம் இடத்திலும் இலங்கையின் திமுத் கருணரத்னே 9-ம் இடத்திலும் ரிஷப் பண்ட் 10-ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணிக்காக காயத்தினால் ஆட முடியாத ரிஷப் பண்ட் இன்னும் 10-ம் இடத்தில் நீடிக்க விராட் கோலி, சூப்பர் ஸ்டார் போன்ற ரசிக பிரஸ்தாப சூப்பர் ஸ்டார்கள் ஒருவர் கூட டாப் 10-ல் இடம்பெற முடியவில்லை. 13-ம் இடத்தில் ரோஹித் சர்மாவும், 14-ம் இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
பந்து வீச்சு தரவரிசையில் பரவாயில்லை. உலகின் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வின் முதலிடம் பிடிக்க 9 மற்றும் 10-ம் இடங்களில் முறையே பும்ரா, ஜடேஜா உள்ளனர். ஆல்ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜா நம்பர் 1 நிலையில் இருக்க, அஸ்வின் 2ம் இடத்தில் இருக்கிறார். அக்சர் படேல் 5-ம் இடத்தில் இருக்கிறார்.
இப்போது ஆக பலவீனமான பரிதாபமான வெஸ்ட் இண்டீசை புரட்டி எடுத்து இந்திய சூப்பர் ஸ்டார்கள் மீண்டும் டாப் 10-க்குள் நுழைந்ததால்தான் உண்டு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago