விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் சபலெங்கா

By செய்திப்பிரிவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா, 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரினா சபலெங்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதி சுற்றில் அரினா சபலெங்கா, 6-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபீருடன் மோதுகிறார். ஆன்ஸ் ஜபீர் கால் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனும் 3-ம்நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் போராடி 6-7(5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்