லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்குமுன்னேறினார் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தினார் செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 42-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை வோண்ட்ரூசோவா 6-4 என கைப்பற்றினார். இதற்கு 2வது செட்டில் பதிலடி கொடுத்த ஜெசிகா பெகுலா அந்த செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார்.
வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டை வோண்ட்ரூசோவா சிறப்பாக விளையாடி 6-4 கைப்பற்றினார். முடிவில் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற மோதலில் வோண்ட்ரூசோவா 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 76-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார். 2 மணிநேரம் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலினாஸ்விட்டோலினா 7-5, 6-7 (5-7), 6-2 என்ற செட்கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago