சென்னை: தீபக் சாஹர் முழுமையாக பக்குவம் அடைவதை நான் பார்க்க போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி தெரிவித்துள்ளார்.
தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் எல்.ஜி.எம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தோனியிடம், அவருக்கும் தீபக் சாஹருக்கும் இடையேயான நட்புக் குறித்து கேட்கப்பட்டது. அதுகுறித்து அவர் பேசும்போது, “ தீபக் சாஹர் போதை போன்றவர். அவர் இல்லை என்றால் நீங்கள் அவரைத் தேடுவீர்கள். உங்களுடன் இருந்தால் இவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று நினைப்பீர்கள் . இதில் நல்ல செய்தி என்னவென்றால், தீபக் தற்போது பக்குவம் அடைந்து வருகிறார். ஆனால், அவர் பக்குவம் அடைய நிறைய காலம் எடுத்துக் கொள்வார். அதுதான் பிரச்சினை. நான் வாழும் வரைகூட அவர் முழுமையாக பக்குவம் அடைந்திருப்பதை என்னால் பார்க்கவே முடியாது” என்று கலகலப்பாக பேசினார்.
சிஎஸ்கே அணியில் உள்ள தோனி - தீபக் சாஹர் அவ்வப்போது கிண்டலாக விளையாடிக் கொள்வது சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago