விம்பிள்டன் டென்னிஸ் | கால் இறுதியில் ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், டேனியல் மேத்வதேவ் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 37-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக ஜிரி லெஹெக்கா விலகினார். இதனால் மேத்வதேவ் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றில் 18-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார். இந்த ஆட்டம் மழை காரணமாக நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஜோகோவிச் 7-6 (8-6), 7-6 (8-6) என முன்னிலையில் இருந்தார். நேற்று தொடர்ந்து விளையாடிய ஜோகோவிச் 7-6 (8-6), 7-6 (8-6), 5-7,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இங்கிலாந்தின் ஜேக்கப் ஃபியர்ன்லி, ஜோஹன்னஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்