சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தமிழில் எல்.ஜி.எம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்விற்காக அவர் சென்னை வந்துள்ளார்.
தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியும் பங்கேற்றனர். அப்போது சென்னை குறித்து சுவாரஸ்ய தகவலை தோனி பகிர்ந்தார்.
“எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமப் போட்டி அரங்கேறியது சென்னை மண்ணில்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிக ரன்கள் பதிவு செய்யப்பட்டதும் சென்னையில் தான். இப்போது எனது முதல் படத்தயாரிப்பும் தமிழ் மொழியில் அமைந்துள்ளது. சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் இங்கு நீண்ட நாட்களுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டு விட்டேன்” என தோனி பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago