ஆஷஸ் தொடர்: நேர்மறை அணுகுமுறையுடன் விளையாடுங்கள் - இங்கிலாந்து அணிக்கு சச்சின் அறிவுரை

By செய்திப்பிரிவு

ஹெட்டிங்லி: நேர்மறை அணுகுமுறையுடன் விளையாடினால் இங்கிலாந்து நிச்சயம் வெற்றி பெறலாம் என்று ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் ஆஷஸ் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும், இங்கிலாந்து 237 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் நான்காவது நாளான இன்று வெற்றி பெற 251 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் ஹெட்டிங்லியில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விக்கெட் நன்றாக விழுவதாக நான் நினைக்கிறேன். இங்கிலாந்து வீரர்கள் தங்கள் விக்கெட்களை அவசரப்பட்டு விரைவாக இழந்துவிடக் கூடாது. இங்கிலாந்து விவேகத்துடன் பேட் செய்ய வேண்டும். அவர்களின் அணுகுமுறை நேர்மறையாக இருந்தால் அவர்கள் வெற்றி பெறலாம். இங்கிலாந்து வீரர்கள் நேர்மறையான அணுகுமுறையுடன் ஷாட் தேர்வில் ஈடுபட வேண்டும்.. அவ்வாறு செய்தால் அவர்கள் நிச்சயம் இந்த இலக்கை அடையலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE