விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: பெட்ரோ விட்டோவா, ஹடாட் மியா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியா, செக் குடிரயசின் பெட்ரோ விட்டோ ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 3-ம்நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 67-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேத்வதேவ் 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியா, ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் பீட்ரிஸ் ஹடாட் மியா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

9-ம் நிலை வீராங்கனையான பெட்ரோ விட்டோவா, செர்பியாவின் நடாலிஜா ஸ்டீவனோவிச்சை 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கிலும் 21-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்சாண்ட்ரோவா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டால்மா கால்ஃபையும் தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தரன் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் போராடி குரோஷியாவின் இவான் டூடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்