லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 2ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் டேனியல் மேத்வதேவ், ஹோல்கர் ரூன் ஆகியோரும் 3-வது சுற்றில் நுழைந்தனர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்மிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-3, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீரரான பிரான்ஸின் அட்ரியன் மனாரினோவை வீழ்த்தினார். 6-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 6-3, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸை தோற்கடித்து 3வது சுற்றில் நுழைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்கா, 41-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் வர்வரா கிராச்சேவா எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலெங்கா 2-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 9-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா விட்டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 69-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
36-ம் நிலை வீராங்கனைன உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், 35-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவை எதிர்கொண்டார். இதில் மார்டா கோஸ்ட்யுக் 6-2, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக படோசா விலகினார். இதனால் மார்டா கோஸ்ட்யுக் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷ்யாவின் கேத்ரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோரும் 3-வது சுற்றில் நுழைந்தனர்.
» துலீப் டிராபி கிரிக்கெட் - புஜரா சதம் விளாசல்
» சையது முஸ்டாக் அலி தொடரிலும் இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago