லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டார்.
ஹெட்டிங்லியில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது டேவிட் வார்னர் 4 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடு வீசிய முதல் ஓவரிலேயே 2வது சிலிப் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 37 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் போல்டானார். நிதானமாக விளையாடிய மார்னஸ் லபுஷேன் 58 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். தனது 100-வது போட்டியில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த மிட்செல் மார்ஷ், இங்கிலாந்து பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர்,100 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் தனது 3-வது சதத்தை விளாசினார். மிட்செல் மார்ஷின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
மட்டையை சுழற்றிய மிட்செல் மார்ஷ் 118 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில், 2வது சிலிப் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியுடம் பிடிகொடுத்து வெளியேறினார். தேநீர் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 52.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தேநீர் உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 60.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிராவிஸ் ஹெட் 39, அலெக்ஸ் கேரி 8, மிட்செல் ஸ்டார்க் 2, பாட் கம்மின்ஸ் 0, டாட் மர்பி 13 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 5, கிறிஸ் வோக்ஸ் 3, ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago