காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ் - இந்தியா ஏமாற்றம்

காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கணக்கில் நைஜீரியாவிடம் தோல்வி கண்டது. காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெல்லாமல் வெறுங்கையோடு திரும்புவது இதுவே முதல்முறையாகும்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் ஷரத் கமல் 11-9, 11-5, 11-7 என்ற நேர் செட்களில் நைஜீரியாவின் செகுன் டோரியோலாவை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அதற்கடுத்த 3 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் தோல்வி கண்டதால், வெற்றி நைஜீரியா வசமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE