WI vs IND | ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய டி20 அணி அறிவிப்பு: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 முதல் 13-ம் தேதி வரையில் இந்த 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டிரினிடட், கயானா, புளோரிடா ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் விளையாடப்படுகிறது. அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய டி20 அணி: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்சர் படேல், சஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார்.

இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE