ஹராரே: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் ஓமனை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஓமன் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுராஜ் குமார் 53, ஷோயிப் கான் 50, காஷ்யப் பிரஜாபதி 31, அயன் கான் 30 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ரோமரியோ ஷெப்பர்டு 3, கைல் மேயர்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
222 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 39.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரண்டன் கிங் 104 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய்ஹோப் 64 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார். உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கெனவே மேற்கு இந்தியத் தீவுகள் இழந்து விட்டது. எனினும் அந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago