புதுடெல்லி: சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கு சிறந்த முறையில் தயாராகும் விதமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதன்படி ஜெர்மனி பயணிக்கும் இந்திய அணி அங்கு சீனாவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுகிறது. தொடர்ந்து ஜெர்மனி அணிக்கு எதிராக 2 போட்டியிலும் இந்திய அணி மோத உள்ளது. இந்த 3 ஆட்டங்களும் ஜூலை 16 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறது. அங்கு தென் ஆப்பிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் ஹாக்கி தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஹாக்கி தொடர் ஜூலை 25 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜெர்மனி சுற்றுப்பயணம், 4 நாடுகள் ஹாக்கி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: சவீதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்.
டிபன்டர்கள்: தீப் கிரேஸ், நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, உதிதா, சுஷிலா சானு புக்ரம்பம்.
நடுகளம்: நிஷா, மோனிகா, சலிமா டெடே, நேஹா, நவ்நீத் கவுர், சோனிகா, பல்ஜீத் கவுர், வைஷ்ணவி விட்டல் பால்கே, ஜோதி சாத்ரி.
முன்களம்: லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, தீபிகா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago