பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டை - பிரேக்கர் வரை நீடித்த ஆட்டத்தில் இந்திய அணி போராடி வென்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து துவங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்திய அணி வெற்றி பெற பெனால்டி ஷாட் அவுட்டில் திறமையாக கோல் கீப்பிங் செய்து குவைத் அணியை தடுத்து முக்கிய காரணமாக இருந்தார் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து. இதன்மூலம் குவைத் அணியை வீழ்த்தியதோடு 9-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது இந்தியா.
பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி 9-வது முறையாக வரலாறு படைத்த நிலையில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
முன்னதாக, தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் 8 அணிகள் கலந்துகொண்ட நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான், குவைத், வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் குவைத் 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தது. அதேவேளையில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
» ஆஷஸ் | ஆஸி.யை விமர்சித்த ரிஷி சுனக்: ஆதரித்த அந்தோணி அல்பனீஸ்!
» FIFA மகளிர் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்து அணியில் இடம் பிடித்த 16 வயது வீராங்கனை
பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இந்தியா - குவைத் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. சொந்த மண்ணில் போட்டி நடைபெற்ற நிலையில், இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா பட்டம் வென்று அசத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago