தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் | 9-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7.30 மணி அளவில் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் மோதுகின்றன. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி 9-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

பெங்களூருவில் நடைபெற்று வந்ததெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான், குவைத், வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் குவைத் 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தது. அதேவேளையில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் இன்று இரவு7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இந்தியா - குவைத் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டிபன்டர் சந்தேஷ் ஜிங்கன் களமிறங்குகிறார். லீக் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிக்கு எதிராக மஞ்சள் அட்டை பெற்றதால் அரை இறுதி ஆட்டத்தில் சந்தேஷ் ஜிங்கன் களமிறங்கவில்லை. அந்த ஆட்டத்தில் அவருக்குபதிலாக அன்வர் அலி களமிறங்கி இருந்தார். சந்தேஷ் ஜிங்கன் களமிறங்குவதன்மூலம் அணியின் டிபன்ஸ் பலம் பெறக்கூடும். தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் உதவி பயிற்சியாளர் காவ்லி மீண்டும் ஒரு முறை டச் லைனில் இருந்தபடி ஆலோசனைகள் வழங்குவார்.

லீக் சுற்றில் ஹாட்ரிக் உட்பட 5 கோல்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, லெபனானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் கோல் அடிக்க சிரமப்பட்டார். எனினும் பெனால்டி ஷூட் அவுட்டில் தனக்கான வாய்ப்பை கோலாக மாற்றி இருந்தார். இறுதிப் போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுனில் சேத்ரி தீவிர முனைப்பு செலுத்தக்கூடும். சாஹல் அத்துல் சமத், மகேஷ் சிங், உதாந்தா சிங் ஆகியோர் பந்தை சரியாக சுனில் சேத்ரிக்கு கடத்தி கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இதுவரை நடைபெற்றுள்ள 13 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 8 முறை பட்டம் வென்றுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாகவே இந்திய அணி சர்வதேச கால்பந்து அரங்கில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி சீரான வெற்றிகளை குவித்து வருகிறது. வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் சிறந்த திறனை வெளிப்படுத்தி நல்ல பார்மில் உள்ளனர். இந்தபார்மை இன்றைய ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் இந்திய அணி 9-வது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்