“நான் ஆடாத ஷாட்களை சூர்யகுமார் ஆடுகிறார்” - டிவில்லியர்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் நேர்த்தியாகவும், எளிதாகவும் ரன் குவிப்பதில் வல்லவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ். அதன் காரணமாக அவர்கள் மிஸ்டர்.360 டிகிரி என அறியப்படுகின்றனர்.

கடந்த 2021-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மறுபக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் அதே ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ். தனது அதிரடி பாணி ஆட்டத்தால் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும் சூர்யகுமார் உள்ளார்.

இந்த சூழலில் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ். “நான் ஆடாத ஷாட்களை ஆடுகிறார் சூர்யகுமார் யாதவ். அவர் கிரிக்கெட் உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. வரும் நாட்களில் தற்போதைய ஆட்டத்தை காட்டிலும் மேலும் சிறப்பாக ஆடும் கூடுதல் ஆட்டத்திறனை கொண்டுள்ள வீரராக அவர் திகழ்வார் என்று எண்ணுகிறேன்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தன்னை ஒரு சீரான வீரராக நிலை நிறுத்துவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எங்களுக்குள் நிறைய ஒற்றுமை இருப்பதை நான் காண்கிறேன்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்