திருநெல்வேலி: டிஎன்பிஎல் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.
திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேலம் அணி155 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சன்னி சாந்து44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்தார். ஆர். கவின் 19, எஸ். அபிஷேக் 10, அட்னன் கான் 15, கேப்டன்அபிஷேக் தன்வர் 17, ஆர்.எஸ்.ஜெகந்நாத் நிவாஸ் 11 ரன்கள்எடுத்தனர். திருப்பூர் அணி தரப்பில் பி. புவனேஸ்வரன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
அதிகபட்சமாக சாய் கிஷோர்26 ரன்கள் சேர்த்தார். துஷார்ரஹேஜா 22, ராதாகிருஷ்ணன் 16, விஜய் சங்கர் 12, பாலச்சந்தர் அனிருத் 22, கேப்டன் என்.எஸ்.சதுர்வேத் 11, அல்லிராஜ் குப்புசாமி 12 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் சச்சின் ராத்தி, செல்வக்குமரன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். மோகித் ஹரிஹரன், ஜெகந்நாத் நிவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
» டைமன்ட் லீக் தடகள போட்டி: 2-வது முறையாக நீரஜ் சோப்ரா சாம்பியன்
» ஆசிய விளையாட்டு போட்டிக்கு அஸ்வினை கேப்டனாக நியமிக்க தினேஷ் கார்த்திக் கோரிக்கை
அபாரமாக ஆடி அரை சதமடித்த சேலம் வீரர் சன்னி சாந்து ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago