சென்னை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மணி பாரதி 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், டேரில் ஃபெராரியோ 21 ரன்களும், பிரான்சிஸ் ராக்கின் 18 ரன்களும் சேர்த்தனர்.
சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் சரவணன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தவிக்கெட்களை அவர், ஒரே ஓவரில் வீழ்த்திஅசத்தியிருந்தார். குர்ஜப்நீத் சிங், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரானஹரி நிஷாந்த் 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.
» உலக டேபிள் டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் தியா, ஸ்ரீஜா ஜோடி
» ஆசிய கபடி சாம்பியன்ஷிப்: 8-வது முறையாக பட்டம் வென்றது இந்திய அணி
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெகதீசன் கவுசிக் 17 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையிலும், தொடக்கவீரரான சுரேஷ் லோகேஷ்வர் 39 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையிலும் ஈஸ்வரன் பந்தில் ஆட்டமிழந்தனர். 65 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்வப்னில் சிங், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சீராக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஸ்வப்னில் சிங் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இதுஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சீகம் மதுரை பேந்தர்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (2-ம் தேதி) லைகா கோவை கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் திருநெல்வேலியில் பிற்பகல் 3.15 மணி அளவில் நடைபெறுகிறது.
ஹாட்ரிக் வெற்றி பெற்றது குறித்து சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் சுப்ரநேயன் கூறும்போது,“தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு 10 ரன்களுக்கும் திருச்சி அணி விக்கெட்டை பறிகொடுத்தது. பிரான்சிஸ் ராக்கின்ஸ், மணிபாரதி சிறந்த கூட்டணி அமைத்தனர்.
இந்த ஜோடியை முருகன் அஸ்வின் பிரித்து திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார். டேரில் ஃபெராரியோ, ஜாஃபர் ஜமால், ராஜ்குமார் ஆகியோரை ஒரே ஓவரில் சரவணன் ஆட்டமிழக்கச் செய்து திருச்சி அணிக்கு அழுத்தம் கொடுத்தார். சரியான நேரத்தில் மணி பாரதியை ஸ்வப்னில் சிங் போல்டாக்கினார். பேட்டிங்கிலும் எங்களது வீரர்கள் சீரான பங்களிப்பை வழங்கினர். புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில்உள்ள நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன’‘ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago