புலவாயோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 6 சுற்றில் நேற்று புலவாயோ நகரில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.4 ஓவர்களில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் தனஞ்ஜெயா டி சில்வா 111 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசியதால் இலங்கை அணியால் கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது. திமுத் கருணரத்னே 33, தீக்சனா 28, வனிந்து ஹசரங்கா 20 ரன்கள் சேர்த்தனர்.
நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
» ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் - ஸ்வியாடெக் விலகல்
» தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் இந்தியா - லெபனான் இன்று பலப்பரீட்சை
214 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணியானது 40 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 67, வெஸ்லி பார்ரெஸி 52, பாஸ் டி லீடி 41 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் தீக்சனா 3, வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளை பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago