ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா

By செய்திப்பிரிவு

புசான்: ஆடவருக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 76-13 என்ற புள்ளிகள் கணக்கில் கொரியாவை தோற்கடித்திருந்தது.

தொடர்ந்து ஜப்பானை 62-17 என்ற கணக்கிலும், சீன தைபேவை 53-19 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 4-வது ஆட்டத்தில் ஈரானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கேப்டன் பவன் ஷேராவத் 16 புள்ளிகள் குவித்தார்.

இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டி இன்று காலை நடைபெறுகிறது. முன்னதாக இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங் காங்குடன் மோதுகிறது. மற்ற லீக் ஆட்டங்களில் ஜப்பான் - ஈரான் அணிகளும், கொரியா - ஹாங் காங் அணிகளும் மோதுகின்றன. ஈரான் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சீன தைபே 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.

இந்த இரு அணிகளும் ஒரே புள்ளியை பெற்றுள்ள போதிலும் எதிரணியை குறைந்த புள்ளிகள் எடுக்க அனுமதித்தன் அடிப்படையில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. ஈரான் 109 ஆட்ட புள்ளிகளையும், சீன தைபே 171 ஆட்ட புள்ளிகளையும் விட்டுக்கொடுத்திருந்தன. இந்த இரு அணிகளுக்கும் அடுத்தப்படியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் ஜப்பான் அணி உள்ளது. ஜப்பான் 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்