இந்தியா-பாகிஸ்தான் போட்டி | அகமதாபாத்தில் உள்ள ஓட்டல் கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

இந்நிலையில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் நாளில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களின் கட்டணங்கள் சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளன. சாதாரண நாட்களில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களில் ஒருநாள் தங்குவதற்கான அறை வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இருக்கும். இது தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு சில ஓட்டல்களில் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஓட்டல் முன்பதிவு இணையதளமான booking.com-ன் படி, ஜூலை 2-ம் தேதிக்கான டீலக்ஸ் அறை ஒன்றின் வாடகை ரூ.5,699 ஆகும். ஆனால், அதே ஹோட்டலில் அக்டோபர் 15-ம் தேதி ஒரு நாள் தங்க விரும்பினால் ரூ.71,999 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஜி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இப்போது ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.8,000 வசூலிக்கிறது. இதுவே அக்டோபர் மாதம் போட்டி நாளில் ஒரு நாள் அறை வாடகை ரூ.90,679 எனக் காட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்களில் போட்டியின் நாளில் அறைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்