டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் 32 ரன்களை எடுத்தபோது இந்த சாதனையை அவர் படைத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைவான இன்னிங்ஸில் பேட் செய்து (174 இன்னிங்ஸ்) 9,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். 172 இன்னிங்ஸில் 9,000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார் குமார் சங்கக்கரா. ராகுல் திராவிட (176 இன்னிங்ஸ்), லாரா மற்றும் பாண்டிங் (177 இன்னிங்ஸ்) ஆகியோர் ஸ்மித்துக்கு அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,054 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 31 சதங்கள் மற்றும் 38 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். அவர்து பேட்டிங் சராசரி 59.96.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 149 பந்துகளில் 85 ரன்களை அவர் எடுத்துள்ளார். மேலும் 15 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அது அவரது 32-வது சதமாக அமையும்.

டெஸ்ட் கிரிக்கெட் அதிக ரன்கள் எடுத்த ஆஸி. பேட்ஸ்மேன்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE