ஹராரே: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று தொடரில் சூப்பர் 6 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றன.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள்தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்த தகுதி சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் ‘சூப்பர் 6’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஜிம்பாப்வே 4 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 8 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. நெதர்லாந்து 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும், மேற்கிந்தியத் தீவுகள் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளும் பெற்றிருந்தன. அதேவேளையில் ‘பி’ பிரிவில் இலங்கை 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றிருந்தது. ஸ்காட்லாந்து 3 வெற்றி, ஒரு தோல்வியுடன்6 புள்ளிகளும், ஓமன் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளும் பெற்றிருந்தன.
லீக் சுற்றில் ஒரே பிரிவில் இருந்து முன்னேறிய அணிக்கு எதிராக வென்ற அனைத்து புள்ளிகளும் சூப்பர் 6 சுற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த வகையில் இலங்கை அணியானது ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் வெற்றி பெற்றிருந்ததால் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோன்று ஜிம்பாப்வே நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகளை வென்றிருந்ததால் 4 புள்ளிகளுடன் சூப்பர் 6 சுற்றை சந்திக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் ஜிம்பாப்வே, நெதர்லாந்திடம் தோல்விஅடைந்ததால் புள்ளிகள் ஏதும் இன்றி களமிறங்குகிறது. இதே நிலைமைதான் ஓமன் அணிக்கும் ஏற்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மோதாத அணிகளுடன் விளையாடும். இந்த வகையில் ஒரு அணி 3 ஆட்டங்களில் மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில்முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
சூப்பர் 6 சுற்றின் தொடக்கத்தில் புலவாயோ நகரில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றன. நாளை (30-ம் தேதி) நடைபெறும் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து, ஜூலை2-ம் தேதி ஜிம்பாப்வே - இலங்கை, ஜூலை 3-ம் தேதி நெதர்லாந்து - ஓமன், ஜூலை 4-ம் தேதி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, ஜூலை 5-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் - ஓமன், ஜூலை 6-ம் தேதி ஸ்காட்லாந்து - நெதர்லாந்து, ஜூலை 7-ம் தேதி இலங்கை - மேற்கு இந்தியத் தீவுகள் மோதுகின்றன.
சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் நுழைந்துள்ளன. இதனால் இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் புள்ளிகள் ஏதுமின்றி உள்ளது. இதனால் அந்த அணி ஸ்காட்லாந்து, ஓமன், இலங்கை ஆகிய 3 அணிகளையும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி அதிகபட்சமாக 6 புள்ளிகளையே எட்டும். மறுபுறம் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் தலா 2 வெற்றிகளை பதிவு செய்தாலே எளிதாக உலகக் கோப்பைக்குள் கால்பதித்துவிடும். இந்த நிலை உருவானால் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடுவதை தவறவிடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago