ODI WC 2023 | சேப்பாக்கத்தில் இந்தியாவின் முதல் ஆட்டம்: தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

By செய்திப்பிரிவு

துபாய்: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறது.

மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் என இந்த தொடர் நடைபெறுகிறது. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம், ஹைதராபாத், சென்னை, லக்னோ, டெல்லி, பெங்களூரு, புனே, மும்பை, தரம்சாலா, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.

முதல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை - சேப்பாக்கத்தில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய அணி விளையாடும் போட்டிகள்

இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் நவம்பர் 15-ம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்