ODI WC 2023 | பூமியில் இருந்து 1,20,000 அடிக்கு மேல் விண்வெளியில் மிளிரும் உலகக் கோப்பை!

By செய்திப்பிரிவு

சென்னை: பூமியில் இருந்து சுமார் 1,20,000 அடிக்கு மேல் விண்வெளியில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையானது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு உலகம் முழுவதும் உலகக் கோப்பை உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஸ்ட்ரேட்டோஸ்பியரில் (Stratosphere) இந்தக் கோப்பை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனுடன் இணைக்கப்பட்ட கோப்பை விண்வெளியை அடைந்துள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 4கே கேமரா புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி உள்ளது.

நாளை (ஜூன் 27) முதல் இந்தியாவில் தொடங்கி, குவைத், மலேசியா, அமெரிக்க, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதியாக மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

“இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஆறு வாரங்கள் உலகின் 10 சிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். உலகக் கோப்பை தொடருக்கான கவுண்ட் டவுன் தொடங்க உள்ள நிலையில் கோப்பையின் இந்த உலக உலா பல நாட்டு ரசிகர்களை இதன் அங்கமாக மாற்ற செய்கிறது” என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE