சென்னை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி.
சேலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை பவர்பிளேவில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என கட்டுப்படுத்தினர் மதுரை சீகம் பேந்தர்ஸ் பந்து வீச்சாளர்கள். இதன் மூலம் இந்த சீசனில் பவர்பிளேவில் குறைந்த ரன்களை பதிவு செய்தது சேலம் ஸ்பார்ட்டன்ஸ். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமித் சாட்விக், கவுரி சங்கர் ஆகியோர் தலா 17 ரன்களும், ஷன்னி சாந்து 16 ரன்களும் சேர்த்தனர்.
இவர்களை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 19.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த சீசனில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் குர்ஜப்நீத் சிங் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். முருகன் அஸ்வின் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், வி.கவுதம் 2.4 ஓவர்களை வீசி 28 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
99 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி ஆரம்பத்திலேயே கேப்டன் சி.ஹரி நிஷாந்த் (0) விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர், வி.ஆதித்யா 8, ஜெகதீசன் கவுஷிக் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் 4-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ஸ்ரீ அபிஷேக் 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், ஸ்வப்னில் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி 42 பந்துகளை மீதம் வைத்து 13 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீசனில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதை வென்ற குர்ஜப்நீத் சிங் கூறும்போது, “சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி, நாளுக்கு நாள் எனது பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்து வருகிறேன். 2 புள்ளிகளை எங்கள் அணி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.
வெற்றி குறித்து சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் சுப்ரநேயன் கூறியதாவது:
தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்களை வீழ்த்தி சேலம் அணிக்கு எங்களது பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். விக்கெட் சரிவை சந்தித்த அந்த அணி மீள முடியாமல் போனது. குர்ஜப்நீத் சிங், முருகன் அஸ்வின், வி.கவுதம் ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்கள். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் கைப்பற்றாத போதிலும் சிறப்பாகவே பந்து வீசினார். குறைந்த ஓவர்களை வீசிய போதிலும் சரணவன், ஸ்வப்னில் சிங், கவுசிக் ஆகியோர்விக்கெட் கைப்பற்றி அழுத்தம் கொடுத்தனர்.
பேட்டிங்கில் ஹரி நிஷாந்தை தொடக்கத்திலேயே நாங்கள் இழந்தோம். எனினும் இளம் வீரர்களான அபிஷேக், ஸ்வப்னில் சிங் ஆகியோர் அபாரமாக விளையாடிவெற்றி கோட்டை கடக்கச் செய்தனர். 13 ஓவர்களிலேயே வெற்றி பெற்றதால் எங்களது நிகர ரன் ரேட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்னும் எங்களுக்கு 3 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. அடுத்ததாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் மோதுகிறோம்.
அந்த அணி இந்த சீசனில் 5 ஆட்டங்களில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அவர்களை நாங்கள் வீழ்த்தும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காண்போம். டாப் ஆர்டர் பேட்டிங்கில் ஏதேனும் ஒரு வீரர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 முதல் 80 ரன்கள் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு ஆட்டத்தில் மட்டும் ஹரி நிஷாந்த் 65 ரன்கள் சேர்த்தார். தற்போதைய வெற்றியால் வரும் ஆட்டங்களில் டாப் ஆர்டரில் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago