பாரீஸ்: 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 2024-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் டோனி எஸ்டான்குவெட் கூறியதாவது: 2024-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி, பழமையான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி, சூரிய கதிர்களை கொண்டு ஏற்றப்படும். அதன் பின்னர் கிரீஸ் நாடு முழுவதும் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு ஏதென்ஸ் நகரில் வழங்கப்படும்.
அங்கிருந்து ஏப்ரல் 27-ம் தேதி புறப்படும் ஒலிம்பிக் ஜோதி, பெலேம் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பிரான்ஸின் மார்செய்ல் துறைமுகத்துக்கு வந்து சேரும். மார்செய்ல் நகரத்திலிருந்து, பழமையான நகரங்களுக்கு ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்படும். நார்மன்டி நகரிலுள்ள மான்ட் செயின்ட்-மைக்கேல், செயின்ட் எமிலியான், சாப்ளிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
» தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்தியா - நேபாளம் இன்று மோதல்
» மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா முதல் ஆட்டத்தில் கனடாவுடன் மோதல்
பிரான்ஸ் நாட்டின் புராதன இடங்கள் உட்பட 400 நகரங்களுக்கு மொத்தம் 68 நாட்கள் ஒலிம்பிக் ஜோதி பயணமாகிறது. இந்த ஜோதியை பிரபல விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் சுமந்து செல்லவுள்ளனர். விளையாட்டு ஜோதியை சுமந்து செல்லும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்று பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார். பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி, இறுதியாக போட்டி நடைபெறும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டு பெரிய கொப்பரையில் ஏற்றப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago