தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சீன தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 95-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை எதிர்த்து விளையாடினார். 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-9, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் 16-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் அங்கஸ் கா லாங்குடன் மோதுகிறார் பிரனோய்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 16-21, 17-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் சு லி யங்கிடம் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷிக்கி ரெட்டி, ரோகன் கபூர் ஜோடி 13-21, 18-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் சியு சியாங் சியே, லின் ஸியாவோ மின் ஜோடியிடம் வீழ்ந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 11-21, 6-21 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தை ஸு யிங்கிடம் தோல்வி அடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago