தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 அணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் மோதுகின்றன.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர்பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

லீக் சுற்றின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 1-ம் தேதி நடைபெறுகின்றன. தொடர்ந்து சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூலை 4-ல் நடைபெறுகிறது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணிகடந்த வாரம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் கால்பந்து அணியினருக்கு நேற்று முன்தினம் இரவில்தான் விசா கிடைத்துள்ளது. எனினும் திட்டமிட்டபடி இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஃபா தரவரிசையில் இந்திய அணி 101-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி 195-வது இடம் வகிக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் சிறப்பான முறையில் தொடரை தொடங்குவதில் தீவிரம் காட்டக்கூடும். இன்டர்காண்டினென்டல் கோப்பையில் சுனில் சேத்ரி, அனிருத் தபாபா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இவர்கள் இருவரும் அடித்த கோல் காரணமாக 46 வருடங்களில் முதன்முறையாக லெபனானை வீழ்த்தி இந்திய அணி பட்டம் வென்றிருந்தது. சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

137 போட்டிகளில் விளையாடி உள்ள சுனில் சேத்ரி, 87 கோல்கள் அடித்துள்ளார். அவர், மேற்கொண்டு 3 கோல்கள் அடிக்கும் பட்சத்தில் ஆசிய கால்பந்து வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடிப்பார். இந்த வகையில் மலேசியாவின் மொக்தார் தஹாரி (1972 முதல் 1985 வரை) 89 கோல்கள் அடித்து 2-வது இடம் வகிக்கிறார். ஈரானின் அலி டேய் (1993 முதல் 2006 வரை) 149 போட்டிகளில் விளையாடி 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பால், இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்வதில் தீவிரம் காட்டும் என கருதப்படுகிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி இதுவரை 8 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவை தவிர மாலத்தீவுகள் இரு முறை (2008, 2018-ம் ஆண்டு), வங்கதேசம் (2003) ஆகிய அணிகளும் பட்டம் வென்றுள்ளன. இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் பிஃபா தரவரிசையில் சில மதிப்புக்க புள்ளிகளை பெற்று முன்னேற்றம் காணலாம்.

இந்திய அணி

கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சாந்து, அம்ரீந்தர் சிங், புர்பா லாசென்பா டெம்பா.

டிபன்டர்கள்: சுபாசிஷ் போஸ், ப்ரீதம் கோட்டல், சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, ஆகாஷ் மிஸ்ரா, மெஹ்தாப் சிங், ராகுல் பேகே.

நடுகளவீரர்கள்: லிஸ்டன் கோலாகோ, ஆஷிக் குருனியன், சுரேஷ் சிங் வாங்ஜாம், ரோஹித் குமார், உதாந்தா சிங், அனிருத் தாபா,நோரெம் மகேஷ் சிங், நிகில் பூஜாரி, ஜீக்சன் சிங், சாஹல் அப்துல் சமத், லாலெங்மாவியா ரால்டே, லலியன்சுவாலா சாங்டே, ரவுலின் போர்கஸ், நந்த குமார்.

முன்களவீரர்கள்: சுனில் சேத்ரி, ரஹிம் அலி, இஷான் பண்டிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்