ஆஷஸ் முதல் டெஸ்ட் | இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

By செய்திப்பிரிவு

பர்மிங்காம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது.

சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. அதிகபட்சமாக அந்த அணிக்காக ஜோ ரூட் 46 ரன்கள், ஹாரி ப்ரூக் 46 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தனர். 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இதனால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது.

ஐந்தாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக, தாமதமாகவே தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேநேரம், மார்னஸ் 13 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்கள், ஸ்காட் போலாந்து 20 ரன்கள், டிராவிஸ் ஹெட் 16 ரன்கள், கேமரூன் கிரின் 28 ரன்கள், அலெக்ஸ் கேரி 20 ரன்கள் ஆட்டமிழந்தனர். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர். அப்போது வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது. பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும் எடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE