நான்டெஸ் (பிரான்ஸ்): நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டி பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹுங் என்-டிஸு - லின் யு பெய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மொத்தம் 31 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ-கே.சாய் பிரதீக் ஜோடி தோல்வி கண்டது.
இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் மேட்ஸ் வெஸ்டர்கார்ட்-கிறிஸ்டின் புஷ் ஜோடி 21-14, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் தனிஷா-சாய் பிரதீக் ஜோடியை வீழ்த்தியது. நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டிகள், பிடபிள்யூஎஃப் உலக டூர் போட்டிகளின் அங்கம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago