ODI WC 2023 Qualifier | இலங்கை அணி அபார வெற்றி

By செய்திப்பிரிவு

புலவாயோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் முதல் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கான அணிகள், தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரிலுள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையும், ஐக்கிய அரபு அமீரக அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்களைக் குவித்தது.

அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 78 ரன்களைக் குவித்தார். பதும் நிசங்கா 57, கருணாரத்னே 52, சமரவிக்ரமா 73, அசலங்கா 48, வனிந்து ஹசரங்கா 23 ரன்கள் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அலி நசீர் 2, முஸ்தபா, ஆயன் கான், பசில் ஹமீது ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். பின்னர் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 39 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து 175 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. வனிந்து ஹசரங்கா அபாரமாக பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

புலவாயோவில் நடைபெற்ற மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியைத் தோற்கடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்