தந்தை சொல்லை தட்டாத விளையாட்டுப் பிள்ளைகள் | Father's Day Special

By எல்லுச்சாமி கார்த்திக்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என சொல்வதுண்டு. இன்று உலக தந்தையர் தினம். பெரும்பாலான பிள்ளைகள் தங்களது தந்தையை போற்றி பாடி கொண்டாடும் நாள். ‘நண்பன், வழிகாட்டி, ஹீரோ’ என அப்பாக்கள் தான் ஒவ்வொருவருக்கும் முதல் இன்ஸ்பிரேஷன். இது சாமனியர்கள் முதல் பிரபலங்கள் வரை பொருந்தி போகிற ஒன்று. அந்த அளவுக்கு தந்தை எனும் உறவின் பந்தம் உன்னதமானது.

தனக்கு கிடைக்காததை தனது பிள்ளைகள் பெற வேண்டும் என விரும்பும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தகப்பன்சாமிகள் தான். அது எப்படி என்றால் தனது கனவுக்கு, தனது பிள்ளை மூலம் உயிர் கொடுப்பது அல்லது தங்களது பிள்ளைகளின் கனவுக்கு தாங்கள் பக்கபலமாக நின்று அதற்கு உயிர் கொடுப்பது.

இந்த தந்தையர் தினத்தில் இந்தியாவுக்காக விளையாட்டு உலகில் கலக்கி வரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது தந்தையை குறித்து என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட்): “ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பாக்கள் தான் முதல் ஹீரோ. எனக்கும் அப்படித்தான். இன்றும் கூட என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது நினைவில் உள்ளது. அவர் என்னிடம் காட்டிய எல்லையற்ற அன்பினால் நான் எனது வழியில் பயணித்தேன். ‘முதலில் நீ நல்ல மனிதனாக இருக்க வேண்டும்’ எனச் சொல்வார். அதையே தான் எனது மகனிடமும் ஒரு தந்தையாக நான் சொல்லி வருகிறேன்” என சொல்லியுள்ளார்.

ஹிமா தாஸ் (தடகளம்): “என் அப்பா ரஞ்சித் தாஸ் தான் எனது நண்பர் மற்றும் வழிகாட்டி. என்னை களத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்ததும் அவர் தான். ஆண் பிள்ளைகள் மட்டும் விளையாடி வந்த இடத்தில் என்னை விளையாட அனுமதித்தது எனது அப்பா தான். ஒருநாள் பயிற்சி செய்து கொண்டிருந்த போது விமானம் அந்த இடத்துக்கு மேல் பறந்தது. அப்போது ஒருநாள் நானும் விமானத்தில் பறப்பேன் என்று நான் அவரிடம் சொன்னேன்.” என தெரிவித்துள்ளார்.

லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை): “அப்பாவிடம் சிறு வயது முதலே நிறையே கற்றேன். அவர் தான் எனக்குள் ஒலிம்பிக் கனவை விதைத்தார். முகமது அலியின் கதையை அவர் சொல்லி தான் நான் கேட்டேன். ஒரு பெண் பிள்ளை என்பதால் தொழில்முறை குத்துச்சண்டையை நான் தேர்வு செய்ய எனக்கு உறுதுணையாக நின்றார். அவர்தான் எனது வழிகாட்டி. என திறமையின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது” எனச் சொல்கிறார்.

பி.வி. சிந்து (பேட்மிண்டன்): “எனது அப்பா தான் எனது இன்ஸ்பிரேஷன். அவரைப் பார்த்து தான் விளையாடவே வந்தேன். நான் பேட்மிண்டனை தேர்வு செய்தபோது அவர் எதுவுமே சொல்லவில்லை” என்கிறார். சிறுவயதில் சிந்து பயிற்சி செய்ய தினமும் 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருக்கும். அப்போது அவருடன் அவரது அப்பா செல்வது வழக்கம். அதே போல உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளின் போதும் சிந்துவின் பெற்றோர் உடன் இருப்பார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக தயாரான போது சுமார் 3 மாத காலம் சிந்து பயிற்சி மேற்கொண்ட போது அவருடன் அவரது அப்பா ரமணா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகத் ஜரீன் (குத்துச்சண்டை): “என் அப்பா தான் எனக்கு ‘தி ராக்’. எனது குத்துச்சண்டை விளையாட்டு கேரியர் தொடங்கிய நாள் முதல் எனக்கு ஆதரவு கொடுத்தவர். சமூக ரீதியாக நான் சிலவற்றை எதிர்கொண்டேன். ஆனால், அப்போது எனக்கு ஆதரவாக நின்று, ஊக்கம் கொடுத்தது அப்பா தான். இன்றும் நான் பங்கேற்கும் தேசிய போட்டிகள் அல்லது ட்ரையலின் போது அப்பா வந்து, அதை பார்ப்பார். அவர் எந்தவொரு போட்டியையும் மிஸ் செய்தது இல்லை. நான் சிறுபிள்ளையாக இருந்த போது அதிகம் சேட்டை செய்து அவரிடம் திட்டு வாங்கிய தருணங்களும் உள்ளன” என்கிறார்.

வேதாந்த் மாதவன் (நீச்சல் வீரர்): “என் அப்பா என்னை அதிகம் சப்போர்ட் செய்வார். அவர் அதிகம் பயணம் மேற்கொள்வார். அவர் எங்கு இருந்தாலும் என்னை அழைப்பார். எனக்கு பக்கபலமாக நிற்பார். போட்டிக்கு முன்னதாக நிறைய ஊக்கம் கொடுப்பார். எனக்காக பிரார்த்தனை செய்வார். அது தான் அவர் தரப்பில் இருந்து எனக்கு கிடைக்கும் சப்போர்ட். என்னுடன் இருந்தால் என்னை பயிற்சிக்கு அழைத்து செல்வார். முறையாக பேசுவார். ஒரு விளையாட்டு வீரனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தேவைப்படும் ஒன்று. அது எனது தந்தையிடம் இருந்து எனக்கு கிடைக்கிறது” என்கிறார்.

ஜஸ்கரன் சிங் (ஹாக்கி வீரர்): “நான் ஹாக்கி விளையாடக் காரணமே எனது அப்பா ராஜீந்தர் சிங் ஜூனியர் தான். அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடிய வீரர். அவரை பார்த்து வளர்ந்த எனக்கு, ஹாக்கி விளையாட்டின் மீதான மோகம் ஒட்டிக் கொண்டது. அவர் தான் எனது முதல் பயிற்சியாளர். எனது இன்ஸ்பிரேஷன்” என்கிறார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்