மிர்பூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 546ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் 3வது பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர் மிர்பூரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 382ரன்களும், ஆப்கானிஸ்தான் 146 ரன்களும் சேர்த்தன. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் விளாசிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ மீண்டும் ஒரு முறை சதம் விளாசி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மோமினுல் ஹக் 121 ரன்கள் விளாசினார்.
662 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. நேற்று4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 33 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 546 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஹ்மத் ஷா30, நசீர் ஜமால் 6, அப்ஸர் ஸஷாய் 6,பஹிர் ஷா 7, கரிம் ஜனத் 18, அமிர் ஹம்சா 5, யாமின் அஹ்மத்ஸாய் 1 ரன்னில் நடையை கட்டினர்.
வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 4, ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 546 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இது 3-வது பெரிய வெற்றியாக அமைந்தது.
» மறக்குமா நெஞ்சம் | 1999-ல் இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி: AUS vs SA
» தொடர்ச்சியாக 3 டி20 போட்டிகளில் அரை சதம்: கட்டம் கட்டி கலக்கும் சாய் சுதர்ஷன்
இந்த வகை சாதனை பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 675 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அந்த அணி 1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 562 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago