BAN vs AFG | ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

டாக்கா: டாக்கா டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.

இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 382 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 80 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 425 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 151 பந்துகளில்,15 பவுண்டரிகளுடன் 124 ரன்களும், மோமினுல் ஹக் 145 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 121 ரன்களும் விளாசினர். கேப்டன் லிட்டன் தாஸ்81 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஸாகீர் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 662 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியானது 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஸத்ரன் ரன் ஏதும் எடுக்காமல் ஷோரிபுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்துல் மாலிக் 5 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் நடையை கட்டினார்.

கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 13 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். ரஹ்மத் ஷா 13, நசீர் ஜமால் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

இரு சதங்களில் 2-வது வீரர்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய வங்கதேச வீரர் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ, 2-வது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது வங்கதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ. இதற்கு முன்னர் மோமினுல் ஹக், இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்