இங்கிலாந்து தன் பேட்டிங் அணுகுமுறை மட்டுமல்ல ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டின் அணுகுமுறையையே மாற்றி பல வெற்றிகளைக் குவித்து வருவது நாம் அறிந்ததே. பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஒரு நியூஸிலாந்து நாட்டவர். இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நியூஸிலாந்து நாட்டவர். இவர்களது கிரிக்கெட் தத்துவம், அதிரடி முறை ‘Bazball' என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பிரபலமாகியுள்ளது. ஆனால் இத்தகைய அணுகுமுறையை ஆஷஸ் தொடரில், அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடத்திக் காட்ட முடியுமா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இன்று எட்ஜ்பாஸ்டனில் பரபரப்பான ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் கூட்டணி உத்திகளினால் அக்கறையற்ற போனால் போகட்டும் போடா ஆட்ட அணுகுமுறையின் மூலம் கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 11-ல் வென்றுள்ளது.
பிரெண்டன் மெக்கல்லம் முதலில் இங்கிலாந்து வீரர்கள் மனதிலிருந்து களைந்த மிகப்பெரிய ‘அழுக்கு மேகம்’ என்னவெனில் வெற்றி தோல்வியைக் கண்டு பயப்படாதே, அணியாக இருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் சரி, மக்களுக்காக, பொழுதுபோக்கு எண்ணத்துடன் அடித்து ஆடு, உனக்கு நீயே என்ஜாய் செய்து ஆடு என்பதே அந்தத் தாரக மந்திரம், மனதிலிருந்து சொந்த, தேச வெற்றிகளைத் தூக்கி விட்டால் முடிவு தேசத்துக்காக ஏகப்பட்ட வெற்றிகள் என்ற பலன் கைகொடுக்கிறது என்பதே மெக்கல்லமின் கோச்சிங் ஸ்டைல். அதில் இதுவரை வெற்றி கண்டுள்ளனர்.
ஆனால் அத்தகைய அணுகுமுறைக்கு கடும் நெருக்கடி, மற்றும் சவால் அளிப்பது இந்த ஆஷஸ் தொடர் என்றால் மிகையாகாது. ஆனால், பென் ஸ்டோக்ஸ் முற்றிலும் வெற்றியை மனதிலிருந்து எடுத்துவிடவில்லை.
» செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படக் காரணம் என்ன? - இபிஎஸ் கேள்வி
» காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை சாலையில் இரவினில் குற்றம்... பகலில் நாற்றம்!
“நாங்கள் ஆஷஸ் தொடரை வெல்லவே விரும்புகின்றோம். நானும் ஆஷஸ் வெல்ல விரும்புகிறேன். ஆனால் வெற்றி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வெறித்தனமாக அதன் பின்னால் செல்லும் அணியாக அல்ல. “இப்போது”, “இங்கே” என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் திறமைக்கேற்ப ஆடினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்” என்கிறார்.
இந்த சவாலில் இங்கிலாந்து வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஆஷஸை வெல்கிறதோ இல்லையோ, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆரோக்கியமான ஒரு கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் இந்த ஆஷஸ் இங்கிலாந்தின் அணுகுமுறை மாற்றத்தினாலும் அதற்கான ஆஸ்திரேலிய பதில் என்ன என்பதிலும் சுவாரஸ்யத்தையும் மக்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கவே செய்துள்ளது. வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாத இங்கிலாந்து, அதிரடி அணி ஆஸ்திரேலியாவுக்கு ஓர் அச்சுறுத்தல்தான். ஆஸ்திரேலியா அணி இதற்குப் பழக்கப்பட்டதல்ல. ஆனால் அதே வேளையில் இதை அப்படியே எதிர்ப்பில்லாமல் வாங்கிக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்களிடத்திலும் மாற்று உத்திகள் இருக்கவே செய்யும்.
ஆனால் இங்கிலாந்து மட்டையாளர்களுக்கான பிட்சைப் போட்டு அதில் 300 அல்லது 350 ரன்களை 75 ஓவர்களில் அடித்து ஆல் அவுட் ஆகி கெக்கலி கொட்டினால், ஆஸ்திரேலியா நிச்சயம் 450 ரன்களுக்கும் மேல் அடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வச் செய்யும். உண்மையான பிட்சைப் போட்டு அதில் இங்கிலாந்து அதிரடி பேட்டிங்கை ஆடும் பட்சத்தில் இரு அணிகளுக்குமே சம வாய்ப்புகள் இருக்கும். எட்ஜ்பாஸ்டன் பிட்ச் வறண்டு காணப்படுகிறது. ஆகவே புதிய பந்து மற்றும் வானிலையினால் ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தால்தான் உண்டு.
இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், ஸ்மித், ஹெட், கிரீன், அலெக்ஸ் கேரி, கமின்ஸ், ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலண்ட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago