'பல கோப்பை தேநீர் குடித்து விழித்திருந்தேன்' - ஐபிஎல் இறுதிப் போட்டி அனுபவம் பகிரும் கான்வே

By செய்திப்பிரிவு

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டெவான் கான்வே. 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியின் அனுபவத்தை கான்வே பகிர்ந்துள்ளார்.

“மழை காரணமாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதமானது. நான் விழித்திருக்க வேண்டி பல கோப்பை தேநீர் குடித்தேன். அப்போது எத்தனை ஓவரில், எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. அது நிலையற்ற ஒரு தருணம். நான் பேட் செய்ய களம் இறங்க இருந்த சூழலில் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி, ‘ரெட்புல்’ கொடுத்தார். அதை நான் குடித்தேன். அதன் பிறகு எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே எனது வேலையை செய்தேன்.

ஜடேஜா, 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி தேடி தந்தார். அது போன்றதொரு கூலான அனுபவத்தை நான் பெற்றதில்லை. வெற்றியை மறுநாள் காலை வரை கொண்டாடினோம்.

இறுதிப் போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்தது சர்ப்ரைஸாக இருந்தது. ஏனெனில் சாய் சுதர்ஷன் அபாரமாக ஆடி இருந்தார். ஜடேஜா, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி இருந்தார். ராயுடு, அபாரமான கேமியோ இன்னிங்ஸ் ஆடி இருந்தார். ஆனாலும், எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது சர்ப்ரைஸ் தான்” என கான்வே தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE