ரோஹித் கேட்ட ‘20 நாட்கள்’ தயாரிப்பு கால அவகாசம் கிடைக்க வாய்ப்பே இல்லை: ரவி சாஸ்திரி கருத்து

By ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் கிரிக்கெட்டை விடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 20-25 நாட்கள் தயாரிப்பு கால அவகாசம் வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனால், ரோஹித் சர்மா ஷெட்யூல் மீது குறைகூறுவது போல் கூறினார் என்றால் ரவிசாஸ்திரி தனிப்பட்ட முறையில் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார். ஒருமுறை தென் ஆப்பிரிக்கா தொடருக்குச் செல்லும் முன் இந்திய அணி அவமானகரமாகத் தோற்று விடக்கூடாது என்பதற்காக அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சில வீரர்களை முன் கூட்டியே தென் ஆப்பிரிக்கா அழைத்துச் சென்று பிட்ச், வானிலை உள்ளிட்ட புறச்சூழலுக்கு வீரர்களை மனரீதியாகத் தயார்படுத்தினார். ஆனால், இன்றைய பிசிசிஐ பல்வேறு வர்த்தகங்களின் முகமைதாரராகவும், முகமை மையமாகவும் மாறிவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பல தாறுமாறனா முடிவுகளை களத்திலும் களத்திற்கு வெளியிலும் எடுத்தது. இப்போது அப்படி செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்று வாய் பேசி வருகின்றனர். 2 மாத காலம் ஐபிஎல் போட்டிகளை ஆடி விட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதெல்லாம் சரியாக வராது.

ஷுப்மன் கில், 3 ஐபிஎல் சதங்களை அடித்தாலும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகவும் தாழ்ந்த தரம், இங்கிலாந்தின் பிட்சில் ஆஸ்திரேலியாவின்பவுலிங்கிற்கு எதிராக அம்பலமானதைப் பார்த்தோம். விராட் கோலியும், சளைக்காமல் ஐபிஎல் தொடரில் ஆடினார். ஆனால், அவரது பேட்டிங் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் குட்-பை சொன்னால் தேவலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

ரஹானே மட்டும்தான் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி தன்னை மீண்டும் ஒரு தாகத்துடன் வெளிப்படுத்திக் கொண்டார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பரவாயில்லை. ஆனால் பவுலிங் ஐபிஎல் தரத்தைத் தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறும் போது, “ரோஹித் சர்மா கூறும் தொடருக்கு முன் 3 வார கால அல்லது 4 வார கால ‘லட்சியத் தயாரிப்பு’ அவகாசம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. நாம் இங்கு எதார்த்தம் பற்றி பேசுவோம். ஒரு போதும் அவர் கேட்கும் 20 நாட்கள் கிடைக்கப்போவதில்லை. அப்படி கிடைக்க வேண்டுமென்றால் ஐபிஎல் தொடரை விட்டு விட வேண்டியதுதான். ஆகவே சுதந்திரத் தேர்வு வீரர்கள் கையில்தான் உள்ளது. அது அமைப்பின் கையிலும் உள்ளது.

பிசிசிஐ இத்தகைய சூழ்நிலைகளை மறுசீராய்வு செய்யும் என்று நம்புகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடர் முடிந்து ஜூன் மாதம்தான் வரும் என்றால் பிசிசிஐ ஐபிஎல் அணி உரிமையாளர்களிடத்தில் சில விஷயங்களை சில விதிமுறைகளைச் சொல்லி விட வேண்டியதுதான்.

இந்திய அணி வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை பற்றி நிச்சயமாக சிந்திக்க வேண்டும். இளம் வீரர்கள் அணிக்குள் வருவதையும் உயர்மட்டத்தில் ஆட்டத்தின் தன்மையை உணரவும், இதே வீரர்கள் இறுதிப் போட்டி போன்ற பெரிய நிகழ்வுக்கு வரும் முன் தயார்ப்படுத்துவது அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவின் கடமையாகும். இதைச் செய்துதான் ஆக வேண்டும், இதனால் சில வீரர்களுக்கு பிடிக்காமல் போனால் கூட கடினமான முடிவுகளையும் எடுத்துத்தான் ஆக வேண்டும்.

இதைத்தான் அணிக்காக முடிவெடுக்கும் குழுவும் அணித்தேர்வாளர்களும் உட்கார்ந்து பேசி ஒரு திட்டத்தை வரையவும், உங்கள் அணியை நீங்கள் எவ்வாறு நிரப்புகிறீர்கள் என்பதையும் பார்க்க வேண்டும். பல ஆண்டுகளாக அதைச் செய்வதில் ஆஸ்திரேலியர்கள் மிகவும் சிறந்தவர்கள். மூன்று வருடங்களில் தாங்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி திட்டமிடுகிறார்கள். இந்த மாற்றங்களைக் கொண்டு வர திடீரென்று ஐந்து வீரர்கள் அணியிலிருந்து விலகிச் செல்வதற்காக அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ச்சியாக இளம் வீரர்களை அணியில் சேர்க்கின்றனர், அதனால் இளமையும் அனுபவமும் கொண்ட ஒரு சேர்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகின்றது.

இளம் வீரர்கள் அங்கே மூத்தவர்களிடமிருந்து விரைவாக கற்றுக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் அணி தொடர்ச்சியாக வலுவாக இருக்கின்றது. ஆகவே திட்டமிடுதல் தேவை. அவர்கள் சில பல கடினமான முடிவுகளை எடுக்கிறார்கள், வீரர்கள் அதை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது. அணிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார் ரவி சாஸ்திரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்