TNPL 2023 | சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

நடப்பு சீசனின் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது அந்த அணி. பிரதோஷ் ரஞ்சன் பால், 55 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். கேப்டன் நாராயண் ஜெகதீசன், 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். சஞ்சய் யாதவ், 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேலம் அணி விரட்டியது. இருந்தும் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் அணிக்காக பந்து வீசிய ராக்கி, விஜு அருள், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சேப்பாக் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE