புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் வரும் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதனை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்து கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது.
வரைவு அட்டவணைப்படி அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல்ஆட்டத்தில் அக். 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் டெல்லியிலும், 15-ம் தேதி பாகிஸ்தானுடன் அகமதாபாத்திலும், 19-ம் தேதி வங்கதேசத்துடன் புனேவிலும், 22-ம் தேதி நியூஸிலாந்துடன் தரம்சாலாவிலும், 29-ம் தேதி இங்கிலாந்துடன் லக்னோவிலும், நவம்பர் 2-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மும்பையிலும், நவ.5-ம்தேதி தென் ஆப்பிரிக்காவுடன் கொல்கத்தாவிலும், நவ.11-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் பெங்களூருவிலும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.
பாகிஸ்தான் அணியானது தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகளுடன் அக்டோர் 6 மற்றும் 12-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் விளையாடுகிறது. தொடர்ந்து 20-ம் தேதி ஆஸ்திரேலியாவை பெங்களூருவில் சந்திக்கிறது பாகிஸ்தான் அணி. 23-ம் தேதி ஆப்கானிஸ்தாடனும், 27-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும் சென்னையில் மோதுகிறது பாகிஸ்தான். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை 31-ம் தேதி கொல்கத்தாவிலும், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை நவம்பர் 5-ம் தேதி பெங்களூருவிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை நவம்பர் 12-ம் தேதி கொல்கத்தாவிலும் விளையாடுகிறது பாகிஸ்தான்.
அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த இரு ஆட்டங்களும் நடத்தும் மைதானம் முடிவாகவில்லை. இறுதிப் போட்டி 19-ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago