பிரெஞ்ச் ஓபன் | 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, டென்னிஸ் சகாப்தத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.

காஸ்பர் ரூட்டை 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முன்னதாக, ஆடவர் ஒற்றையர் டென்னிஸில் ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை ஜோகோவிச் இன்று முந்தினார். ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார்.

இதில் இன்னொரு ஆச்சரியமாக, ஜோகோவிச் வென்ற 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10க்கும் மேற்பட்டவை அவர் 30 வயதுக்குமேல் வென்றவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE