ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 6 வெள்ளி பதக்கம்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3-ல் இந்தியா 6 வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா 232-234 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-238 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.

மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.

ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் பார்த் சலுங்கே 2-6 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங்ஸுவிடம் தோல்வி அடைந்து வெளிப் பதக்கம் பெற்றார். மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருமா பிஸ்வாஸ் 2-6 என்ற கணக்கில் சீனாவின் அன் குயிஸுவானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்தியா 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5-வது இடம் பிடித்து நிறைவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்