WTC Final நாள் 3 | திருப்புமுனை ஏற்படுத்திய ஜடேஜா; லபுசேன் பொறுமை - ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை

By செய்திப்பிரிவு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களும், ஸ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மானாக இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஸ்ரீகர் பரத் போல்டானார். களத்திற்கு வந்த ஷர்துல் தாக்கூர் ரஹானேவுடன் கைக்கோத்தார். இன்றைய போட்டியில் ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே 5 ஆயிரம் ரன்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ரஹானேவை பேட் கம்மின்ஸ் 89 ரன்களில் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்களில் போல்டாக, அவரைத் தொடர்ந்து 51 ரன்களுடன் நடையைக் கட்டினார் ஷர்துல். இந்த இன்னிங்ஸில் ஷர்துலின் பங்களிப்பும் முக்கியமானது. இறுதியில் முஹம்மது சமி கொடுத்த கேட் மூலம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில், பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

173 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை போல ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சிராஜ். இம்முறை டேவிட் வார்னரை ஒரு ரன்னில் வெளியேற்றினார். சிறிதுநேரத்தில் மற்றொரு ஓபனர் உஸ்மான் கவாஜாவை 13 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணியை இம்முறை சீக்கிரமாகவே வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் ரவீந்திர ஜடேஜா. வந்தது முதல் ரன் சேகரிப்பில் தீவிரம் காட்டிய ஸ்டீவன் ஸ்மித்தை 34 ரன்களில் 3வது விக்கெட்டாக சாய்த்த ஜடேஜா, ட்ராவிஸ் ஹெட்டையும் சிறிது நேரத்தில் காட்டன்போல்டக்கினார். ட்ராவிஸ் ஹெட் 18 ரன்களில் நடையை கட்டினார். எனினும் ஒன்டவுன் வீரராக இறங்கி பொறுமை கடைப்பிடித்து வருகிறார் ஆஸியின் முன்னணி பேட்ஸ்மேன் லபுசேன்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. லபுசேன் 41 ரன்கள், கிரீன் 7 ரன்கள் உடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளனர். நாளை நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விரைவாக விக்கெட்டை வீழ்த்தும்பட்சத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்