லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா எல்பிடபள்யூ முறையில் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 13 ரன்களில் போல்டானார். புஜாராவும் 14 ரன்களில் போல்டாக விராட் கோலி மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் கோலிக்கு புஜாரா மீது அப்படி என்ன பாசமோ தெரியவில்லை, புஜாரா எடுத்த அதே 14 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதன்பின் ரஹானே - ஜடேஜா இணைந்து அணியை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா 48 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லயன் சுழல்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே - ஜடேஜா இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களும், ஸ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மானாக இருந்தனர்.
» WTC Final நாள் 3 | அணியை மீட்கும் ரஹானே அரைசதம்; உறுதுணையாக களத்தில் ஷர்துல்!
» WTC Final | எங்கள் தலைமுறையின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலி புகழாரம்
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஸ்ரீகர் பரத் போல்டானார். களத்திற்கு வந்த ஷர்துல் தாக்கூர் ரஹானேவுடன் கைக்கோத்தார். இன்றைய போட்டியில் ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே 5 ஆயிரம் ரன்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ரஹானேவை பேட் கம்மின்ஸ் 89 ரன்களில் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்களில் போல்டாக, அவரைத் தொடர்ந்து 51 ரன்களுடன் நடையைக் கட்டினார் ஷர்துல். இந்த இன்னிங்ஸில் ஷர்துலின் பங்களிப்பும் முக்கியமானது. இறுதியில் முஹம்மது சமி கொடுத்த கேட் மூலம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில், பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago