லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி ரன் வேட்டை நிகழ்த்தியது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கலவையுடன் களமிறங்கியது. பிரதான சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா இடம் பெற்றார். அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வேகப்பந்து வீச்சாளர்களாக மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம் பெற்றனர். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. உஸ்மான் கவாஜா 10 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எதும் எடுக்காமல் மொகமது சிராஜ் பந்தில், விக்கெட் கீப்பர் பரத்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.
சீராக ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் 60 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்தில் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
2வது விக்கெட்டுக்கு லபுஷேனுடன் இணைந்து வார்னர் 70 ரன்கள் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 26, ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடினார்கள்.
லபுஷேன் 62 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் போல்டானார். 76 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் இந்திய பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தினார். குறுகிய வடிவிலான ஆட்டம் போன்று அவர், மட்டையை சுழற்றினார். 106 பந்துகளில், 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 6வது சதத்தை விளாசினார் டிராவிஸ் ஹெட். மறுமுனையில் நிதானமாக பேட் செய்த ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 38வது அரை சதமாக அமைந்தது.
முதல் நாள் ஆட்டம் முடிவின் போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago