புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வரும் 15ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கடந்த கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்துள்ளனர். அவர், மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பிலும் பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதன் ஒரு கட்டமாக கடந்த மே 28-ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை அழைத்து நேற்று தனது இல்லத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுடன் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரிஜ் பூஷண் சரண் சிங்மீதான பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் ஜூன் 15-ம் தேதிக்குள் முடிவு காணப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் 30-ம் தேதி நடத்தப்படும்.
மல்யுத்த வீரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று முறை பொறுப்பு வகித்துள்ள பிரிஜ் பூஷண் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கக்கூடாது என மல்யுத்த வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜூன் 15-ம் தேதி வரை மல்யுத்த வீரர்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago