இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 131 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மூத்த வீரரான ஷோயிப் மாலிக் 61 பந்துகளில், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை அமைக்க உதவினார். இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
293 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 67 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை பறிகொடுத்தது. நிரோஷன் திக்வெலா 19, கேப்டன் உபுல் தரங்கா 18, தினேஷ் சந்திமால் 4, மெண்டிஸ் 2, ஸ்ரீவர்தனா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அந்த அணியால் சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடிய திஷாரா பெரேரா 21, லகிரு திரிமானே 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
32.1 ஓவரில் 132 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த இலங்கை அணி தோல்வி பாதையில் பயணிக்க தொடங்கியது. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த அகிலா தனஞ்ஜெயா, வாண்டர்சே ஜோடி சிறிது நேரம் போக்கு காட்டியது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி தாமதம் ஆனது. 48-வது ஓவரில் வாண்டர்சே 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது. தனஞ்ஜெயா 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ருமான் ரயீஸ், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஷோயிப் மாலிக் தேர்வானார். 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago